வற் வரிக்கு எதிராக கண்டனப் பேரணி

🕔 June 29, 2016

Protest  - 087
– க. கிஷாந்தன் –

ற் வரி அதிகரிப்புக்கு எதிரான கண்டனப் பேரணியொன்று பண்டாரவளையில் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

அகில இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து பண்டாரவளை ஐக்கிய வர்த்தக சங்கம் இந்தப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.

வற் வரி அதிகரிப்பினால் வர்த்தகர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில், இந்தக் கண்டனப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்காரணமாக, இன்றைய தினம் பண்டாரவளை நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

இதேவேளை, அத்தியாவசிய பொருட்களுக்கு அறவிடப்படும் வற் வரிக்கு எதிராக பதுளை நகரில் இன்றைய தினம் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

பதுளை வர்த்தக ஒன்றியம் – இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.Protest  - 088 Protest  - 086

Comments

புதிது பேஸ்புக் பக்கம்