அட்டாளைச்சேனையில் டிப்பர் மோதி, இளைஞர் மரணம்

🕔 June 28, 2016

Accident - Add - 091
– முன்ஸிப் –

ட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதி வழியாக, கல்முனை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமொன்று, சைக்கிளில் வந்த இளைஞரை மோதியது.

இதில் காயமடைந்த இளைஞர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாகத் தெரியவருகிறது.

விபத்தில் உயிரிழந்த இளைஞர் கொழும்பைச் சேர்ந்தவராவர். இவர் தனது குடும்பத்தினருடன் அட்டாளைச்சேனையில் வசித்து வந்தார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(படங்கள்: சப்னி அஹமட்)Accident - Add - 0989 Accident - Add - 094

Comments

புதிது பேஸ்புக் பக்கம்