மு.கா. தலைமையகத்தில் அமைச்சர் றிஷாட்

🕔 June 15, 2015

Discussion - Tharussalam - 02கில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன் – நேற்று ஞாயிற்றுக்கிழமை, மு.காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமுக்கு வருகை தந்திருந்தார்.

அரசியலமைப்பின் சர்ச்சைக்குரிய உத்தேச 20ஆவது திருத்தம் தொடர்பில், சிறுபான்மையினக் கட்சிகளினதும், சிறிய கட்சிகளினதும் பிரதிநிதிகள் – நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து – அவசர கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டனர்.

இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காகவே, அமைச்சர் றிஷாட் – தாருஸ்ஸலாம் வந்திருந்தார்.

மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான  ரஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், மு.கா. செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான எம்.ரீ. ஹஸனலி, பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன, டக்ளஸ் தேவானந்தா, விஜித ஹேரத், மேல் மாகாண சபை உறுப்பினர் மனோ கணேசன், ஆனந்த மானமடு, சரத் மனமேந்திர மற்றும் குமரகுருபரன்  உட்பட மேலும் பலர் கலந்து கொண்டு, மிகவும் காட்டமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தனர். Discussion - Tharussalam - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்