தலைப்புச் செய்திகள்

சி.சி.ரி.வி. கமராவைப் புறக்கணித்து, குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

Bandaranaike international airport - 097ண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் உட்பகுதியில் சி.சி.ரி.வி. கண்காணிப்புக் கமரா பொருத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குடிவரவு –  குடியகல்வு அதிகாரிகள் இன்றுசெவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக விமானநிலையத்தின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு விமானங்களில் வருகை தந்த பயணிகள், விமானநிலையத்திலிருந்து வெளியேறவும், வெளிநாடு செல்வதற்காக வந்த பயணிகள் விமானத்தினுள் நுழைவதற்கும் முடியாமலிருந்தாகக் கூறப்படுகிறது.