உள்ளுராட்சி சபைகள் சிலவற்றின் ஆயுட்காலம் நீடிக்கப்படவுள்ளதாகத் தெரிவிப்பு

🕔 June 27, 2016

Faizer musthafa - 011ள்ளூராட்சி சபைகள் சிவவற்றின் ஆயுட் காலங்களை நீடிக்கப்படவுள்ளதாக அரசியல்  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

23 உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் இம் மாதம் 30ம் திகதியுடன் நிறைவடைகின்றன.

இந்தஉள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலங்கள் கடந்த வருடம் டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், அவற்றினை மேலும் ஆறு மாதங்களுக்கு (ஜூன் 30 வரை) நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது.

இந்தநிலையில் குறித்த காலப் பகுதியும் நிறைவடையவுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் இறுதி இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், பெரும்பாலும் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான கால எல்லை நீடிக்கப்படலாம் என, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வௌியிட்டுள்ளளன.

இதேவேளை, இந்த விடயம் குறித்து உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் ஊடகமொன்று வினவியபோது;

“இது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இவ்வாரத்தில் கலந்துரையாடல்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுளோம்” என்று அவர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்