தாஜுத்தீன் கொலை வழக்கு; அனுர சேனநாயக்க உள்ளிட்டோரின் பிணை மனு நிராகரிப்பு

🕔 June 23, 2016

Anura Senanayake - 013சீம் தாஜுத்தீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரின் பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் மேற்படி மனுக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அதனை நிராகரிப்பதாக மன்று அறிவித்தது.

வசீம் தாஜுத்தீனின் மரணம் தொடர்பில், சாட்சிகளை மறைக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இவர்கள் – விளக்கமறியில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, எதிர்வரும் 07ஆம் திகதி வரை, மேற்படி சந்தேக நபர்களின் விளக்கமறியலை நீடிக்குமாறும், இன்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்