நெருப்புடா பாடலுக்கு, கலக்கல் நடனம்

🕔 June 22, 2016
Neruppuda - 098‘கபாலி’ படத்தின் நெருப்புடா பாடல் டீஸரை ரசிகர்கள் நெட்டிசன்கள் என எல்லோரும் கொண்டாடினர். அதில் ட்ரீம் டீம் தனி ஸ்டைலில் நெருப்புடா பாடலுக்கு நடனத்தை வடிவமைத்து, யூடியூபில் பதிவேற்றியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி ஹிட்டடித்து வருகிறது.

இந்த நடனத்தை வடிவமைத்து, ஃபெர்பார்ம் செய்த ராக்ஸி ராஜேஷ், தளபதி சண்முகத்தின் அதிவேக துள்ளல் ஸ்டெப்ஸைப் பார்த்து நீங்கள் நிச்சயம் மிரள்வீர்கள். சிலிர்த்தெழுவீர்கள். உங்கள் கண்களை நம்ப முடியாமல் திரும்பத் திரும்ப விரும்பிப் பார்ப்பீர்கள்.

நடையா? உடையா? நடனமா? எது பெஸ்ட்? என்று நீங்கள் ஒவ்வொன்றாய் உற்று கவனிக்கும் போது, நீங்கள் ஆச்சர்யம் அடைவது உறுதி. அவர்கள் உழைப்புக்கு ஒரு சல்யூட் வைத்துவிட்டு இந்த காணொளியைக் காணலாம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்