உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தனித்துப் போட்டி; மஹிந்த அணி தெரிவிப்பு

🕔 June 21, 2016

Mahinda - 094ள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி தனித்து போட்டியிட போவதாக தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கூட்டு எதிரணியினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

எக்காரணம் கொண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தாம் இணையப் போவதில்லை என்றும் இதன்போது அவர்கள் கூறினர்.

உள்ளுராட்சி மன்றங்கள் பலவற்றின் ஆயுட்காலம் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், அவற்றுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு, கூட்டு எதிரணியினர் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயினும், எல்லை மீள் நிர்ணய நடவடிக்கை முற்றுப் பெற்ற பின்னரே, உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை நடத்தப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்