தாஜுதீன் கொலை தொடர்பில், அனுர சேனநாயக்க குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கத் தயார்

🕔 June 19, 2016

Anura Senenayake  - 64க்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனநாயக்க, குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

குறித்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை நடைபெறும்போது, தனது ஒப்புதல் வாக்குமூலத்தினை அனுர சேனநாயக்க வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாஜூதீன் கொலை தொடர்பில் அனுர சேனாநாயக்க, கடந்த மே 23ம் திகதியன்று கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நாரஹென்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியும், இந்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அவர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்