எழுந்திரு வில்லியம்; பேரனை அதட்டிய, இங்கிலாந்து மகாராணி
🕔 June 18, 2016
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத், தனது பேரன் இளவரசர் வில்லிமை அதட்டிய வீடியோ காட்சி, தற்போது இணையத்தில் வெளியாகி, பரவலாகப் பேசப்படுகிறது
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் 90ஆது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.சமீபத்தில் பக்கிங்காம் அரண்மனை பெல்கனியில் இருந்து மகாராணியின் குடும்பம் நின்று வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.
பெல்கனியில் மகாராணி, இளவரசர் வில்லியம், இளவரசர் ஹரி, இளவரசி கேட் மிடில்டன் மற்றும் குட்டி இளவரசர் ஜோர்ஜ், இளவரசி சார்லோட் ஆகியோர் இருந்தனர்.
அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு பிறகு மகாராணி சிறிய உரையை ஆற்றினார். அப்போது, இளவரசர் வில்லியமை தவிர மற்ற அனைவரும் எழுந்து நின்றுள்ளனர்.
இதனை இளவரசர் வில்லியம் கவனிக்காமல் தொடர்ந்தும் இருக்கையில் அமர்ந்தவாறு இருந்தார். வில்லியமின் இந்தச் செயலால் சிறிது அதிருப்தியடைந்த மகாராணி; “எழுந்து நில் வில்லிய்ம்” (Stand up, William) என அதட்டியவாறு உத்தரவிட்டார்.
பாட்டியின் எச்சரிக்கை வார்த்தையால் கலக்கம் அடைந்த இளவரசர் வில்லியம் அவசர அவசரமாக எழுந்து நின்றார்..
இணையத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.