நான் சம்பாதித்தவை அனைத்தையும் எனது கணவர் தொலைத்து விட்டார்; ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா

🕔 June 18, 2016

Susanthika - 09871தான் சம்பாதித்தவை அனைத்தையும், தனது கணவர் தொலைத்து விட்டதாக ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, தன்னுடைய கணவரால் – தான் கொடுமைப்படுத்தப்பட்டு வந்ததாகவும், வெட்கத்தினால் இதனை வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

தனது கணவரால் இன்று சனிக்கிழமை தாக்கப்பட்ட நிலையில், கம்பஹாவிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவரும் சுசந்திகா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“எனக்குச் சொந்தமான வீடொன்றினை வாடகைக்கு விடுவதற்கு முயற்சித்த போது, எனது கணவர் என்னுடன் முரண்பட்டு – என்னைத் தாக்கினார்.

நேற்றிரவு குடிபோதையில் வந்த எனது கணவர் என்னை கடுமையாகத் தாக்கினார்” என்றார்.

சுதந்திகாவின் கணவர் தம்மிக நந்தகுமார, தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments