மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கைது

🕔 June 18, 2016

Udaya gammanpila - 09நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட விசாரணை பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர்.

நுகேகொட, பூகொட வீதியிலலுள்ள, அவரின் அலுவலகத்தில் வைத்து, இன்று காலை அவர் கைதாகியுள்ளார்.

இந்த நிலையில், தான் கைது செய்யப்பட்டுள்ளதை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவும் ஊடகங்களுக்கு உறுதி செய்துள்ளார்.

போலியான அட்டோனி பத்திரத்தின் ஊடாக, அவுஸ்ரேலிய நிறுவனம் ஒன்றின் பங்குகளை விற்பனை செய்தமை தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக, பொலஸ் விசேட  விசாரணைப் பிரிவு முன்னிலையில் நாடாளுமன்று உறுப்பினர் கம்மன்பில அண்மையில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர் கம்மன்பில மஹிந்த அணியின் தீவிர செயற்பாட்டாளராவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்