பிரித்தானியாவின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக் கொலை

🕔 June 17, 2016
சுட்டுக் கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரையும், கொலையாளியை பொலிசார் கைது செய்துள்ளமையையும் படங்களில் காணலம்

சுட்டுக் கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரையும், கொலையாளி எனச் சந்தேகிக்கப்படும் நபரை பொலிசார் கைது செய்துள்ளமையையும் படங்களில் காணலம்

பிரித்தானியாவின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸ் (41 வயது) துப்பாக்கியால் சுடப்பட்டு பலியானதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா இல்லையா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினரான ஜோ காக்ஸ்,  நூலகமொன்றினுள் கூட்டம் நடத்திக கொண்டிருந்ததாகவும், அதன்போது வெளியே, சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவரிடையே தலையிட்டார் என்றும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த இரண்டு நபர்களில் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், காக்ஸ் அவருடன் போராடியபோது அவர் சுடப்பட்டார் எனவும் சம்பவத்தைக் கண்டவர் தெரிவித்துள்ளார்.

அவர் ரத்த வெள்ளத்தில் நடை பாதையில் விழுந்துகிடந்த நிலையிலும்கூட, தாக்குதலில் ஈடுபட்டவர் அவரை தொடர்ந்து கத்தியால் குத்தியதாகவும், இத்தாக்குதல் அவர் மீது குறிவைத்தே நடத்தப்பட்டது என்று வேறு சிலர் கூறுகின்றனர்.

இது குறித்து தோமஸ் மயர் என்று உள்ளுரில் அறியப்படும் 52 வயது நபர் ஒருவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர், 03 மற்றும் 05 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்