05 மாதங்களில் 1114 பேர் பலி

🕔 June 14, 2016

Amarasri Senaratna - DIG - 012வீதி விபத்துக்களில் இந்த வருடத்தின் முதல் 05 மாதங்களில் மாத்திரம் நாடு முழுவதும் 1144 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் இடம்பெற்ற வீதி விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

யுத்த காலங்களில் ஏற்பட்ட உயிரிழப்புக்களை விடவும், வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமானவையாக உள்ளன என்று சுட்டிக்காட்டப் படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்