அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு
🕔 June 13, 2016



– றிசாத் ஏ காதர் –
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமையன்று சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் இடம்பெற்றது.
பேரவையின் தலைவர் கலாபூஷணம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெற்ற மேற்படி இப்தார் நிகழ்வில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், கல்வியலாளர்கள், சமூகத் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பேரவையின் தலைவர் உரையுடன் ஆரம்பமான இப்தார் நிகழ்வில், ஊடகவியாளர்கள் இஸ்லாமிய நெறிமுறையுடன் எவ்வாறு தொழிலாற்ற வேண்டும் எனும் தலைப்பில் முப்தி கே.எல். சியானுதீன் பிரசங்கம் நிகழ்த்தினார்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் செயலாளர் எம். சஹாப்தீனின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.


Comments



