கிண்ணியாவில் இலவச குடிநீர் இணைப்பினை, இம்ரான் எம்.பி. வழங்கி வைத்தார்
கிண்ணியா பிரதேசத்திலுள்ள 15 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பினை பெறுவதற்கான ஆவணங்களை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைத்தார்.
அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுகொடுக்கும் நோக்கில் clean drinking water to all செயல்திட்டத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் ஆரம்பித்துள்ளார்.
இதன்ஒரு கட்டமாகவே இன்று கிண்ணியா பிரதேசத்திலுள்ள 15 குடும்பங்களுக்கான இலவச குடிநீர் இணைப்பு வழங்கிவைக்கப்பட்டது.
மேற்படி செயற் திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்தில் சுத்தமான குடிநீர் பெற கஷ்டப்படும் குடும்பங்களுக்கு இலவச கிணறு ,குழாய் கிணறு, குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றன.