10 ராணுவ வீரர்கள் ஹட்டனில் கைது

🕔 June 12, 2016

Arrested - 01– க. கிஷாந்தன் –

யில் கடவையில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களை தாக்கிய குற்றஞ்சாட்டில்  10 ராணுவ வீரர்களை, ஹட்டன் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில், கொழும்பு செல்வதற்காக தியத்தலாவை ரயில் நிலையத்தில் வைத்து மேற்படி பத்து ராணுவ வீரர்களும் ரயிலில் ஏறியுள்ளனர்.

தலவாக்கலைக்கும் கொட்டகலைக்கும் இடையில் ரயில் சென்றுக்கொண்டிருந்த போது, ரயில் கடவையில் வேலை செய்துகொண்டிருந்த ரயில்வே பணியாளர்களை, ரயிலில் பயணித்த போது கட்டைகளாலும் பொல்கலாலும் ராணுவ வீரர்கள் தாக்கியுள்ளனர்.

இது தொடர்பில், தலவாக்கலை ரயில் நிலைய அதிகாரிகளுக்கு பணியாளர்கள் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, தலவாக்கலை ரயில் நிலைய அதிகாரிகளினால் ஹட்டன் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் ரயில் நிலையத்தில் குறித்த ரயில் தரித்து நின்ற வேளையில், ரயில் பாதுகாப்பு அதிகாரிகள், மேற்படி பத்து ராணுவ வீரர்களையும் ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்