கற் சிலையாக மாறும் சிறுவன்

🕔 June 10, 2016

Boy - 098
இந்தியாவைச் சேர்ந்த ரமேஷ் தர்ஜி என்ற 11 வயது சிறுவன் இக்தியோசிஸ் என்னும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.

இந்நோயின் தாக்கத்தினால் ரமேஷ் தர்ஜி நாளாக நாளாக கற் சிலையை போன்று மாறி வருகிறான்.

இந்த நோயினை குணப்படுத்த சிகிச்சைகள் இருந்தும், போதிய பணம் இல்லாததால் தங்களின் மகனை சிகிச்சைக்கு அழைத்து செல்ல முயலவில்லை என்று ரமேஷ் தர்ஜியின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட சீன நாட்டுச் சிறுவன் ஒருவரைப் பற்றிய செய்திகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஊடகங்களில் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தது.

உலகில் 16 ஆயிரம் குழந்தைகள் இந்த நோயினால் பாதிக்க்பபட்டுள்ளார்கள் என்று 2013 ஆண்டு தெரிவிக்கப்பட்டிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்