எனக்கு வாகனம் தேவையில்லை; அமைச்சு வாகனத்தை நிராகரித்தார் பிரதியமைச்சர் பாலித

🕔 June 9, 2016

பிரதியThewarapperuma - 086மைச்சர் பாலித தேவபெரும – தனக்கு அமைச்சினூடாக ஒதுக்கப்பட்ட வாகனத்தை, தேவையில்லை என மறுத்துள்ளார்.

இது தொடர்பில் பிரதியமைச்சர் தனது அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றினை எழுதியுள்ளார். அதில் – தனது பாவனைக்காக அமைச்சு வானங்கள் எவையும் தேவையில்லை என்று தெரிவித்துள்ளதோடு, அமைச்சு வாகனமொன்றினை தனக்காக ஒதுக்கும்போது ஏற்படும் செலவான 28 மில்லியன் ரூபாவினை உள்நாட்டு கலைஞர்களின் நலன்புரி திட்டத்துக்காக ஒதுக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேவேளை, அரசியல்வாதிகள் தமது நலன்களை விடவும் பொதுமக்கள் சேவையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதியமைச்சர் பாலித சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர்கள் சிலருக்காக வாகனங்களைக் கொள்வனவு செய்யும் பொருட்டு, அரசாங்கம் 1180 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்வதற்கு தீர்மானித்துள்ளமை தொடர்பில், பாரிய விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்