இலங்கையில் 20 வீதமானோருக்கு மனநிலை பாதிப்பு
இலங்கையில் பத்து பேரில் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஆயினும், 20 வீதமானோர் மட்டுமே தமது நோய்க்காக சிகிச்சை பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவிதார்.
அத்துடன் உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, தற்கொலை செய்து கொள்வோர் வரிசையில் இலங்கை நான்காம் இடத்தில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கையில் நூற்றுக்கு 50 வீதமானோர் மதுவுக்கு அடிமையாகியுள்ளதாகவும், இதுவே மனநிலை பாதிப்பதற்கு முக்கிய காரணம் எனவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மனநிலை பாதிப்பு பிரச்சினையை குறைப்பது தொடர்பில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சூழலை உருவாக்குவது கட்டாயம் எனவும் அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.