ஒலியமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
ஒலியமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று புதன்கிழமை பகல் 01.00 மணியளவில் நாடாளுமன்றம் கூடியது.
இதன்போது பிரதமரிடம் கேள்வி எழுப்பும் நேரத்தில், ஒலியமைப்பில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, நாடாளுமன்ற கூட்டத்தை நாளை காலை 9.30வரை ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையிலேயே இந் நிலைமை நேர்ந்துள்ளது.