தஜ்வீத் ஓதற் கலையை நிறைவு செய்தவர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் வைபவம்

🕔 June 14, 2015

Rahmaniya - 02– அபூமனீஹா

ட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை அல்-மத்ரஸதுர் றஹ்மானிய்யா குர்ஆன் மத்ரசாவில் அல்குர்ஆன் தஜ்வீத் ஓதற் கலை பயிற்சியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்ற வெள்ளிக்கிழமை –  பாலமுனை அல்-ஈமாய்யா அரபுக்கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

மத்ரசாவின் தலைவரும் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளருமான ஏ.சாகுல் ஹமீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டகளப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி என்.எம். அப்துல்லா பிரதம அதிதியாகவும், சிரேஸ்ட சட்டத்தரணி கலாநிதி ஏ.எல்.ஏ. கபூர் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் பி.எம். அபுல்ஹஸன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

அல் மத்ரசதுர் றஹ்மானிய்யாவில் அல்குர்ஆனை பூர்த்தி செய்த மாணவர்கள் இந்நிகழ்வில் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பாலமுனை  ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் யு.எல். அபூபக்கர், பாலமுனை மின்ஹாஜ் மகாவித்தியாலய அதிபர் எஸ்.எம்.எம். ஹனிபா உட்பட பெற்றோர்கள், மாணவர்கள், மத்ரசாவின் நிர்வாகிகளும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.Rahmaniya - 01Rahmaniya - 03Rahmaniya - 04

Comments