கோட்டாவை சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக நியமிப்பது குறித்து பேச்சு; அமைச்சர் செனவிரட்ன

🕔 June 5, 2016

WDJ Senaviratna - 099ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை நியமிப்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக, அமைச்சர் டப்ளியு.டி.ஜே. செனவிரட்ன வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளதாக ‘ஏசியன் மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷவும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில், நாட்டுக்கு பாரிய சேவை செய்துள்ளனர் என்றும் அமைச்சர் கூறியதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், முன்னைய அரசாங்கமானது நாட்டில் நல்லிணக்கத்தினைக் கட்டியெழுப்பத் தவறிவிட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவை இவ்வாறு சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைமைப் பதவிக்கு நியமிக்கும் போது, கட்சி பிளவுபடாமல் இருக்கும் என்றும் அமைச்சர் செனவிரட்ன தெரிவித்துள்ளார் என்று, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments