ஆறு அடி நீளமான சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு
🕔 June 5, 2016
– க. கிஷாந்தன் –
ஹட்டனில் ஆறு அடி நீளமான சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தோணிமலை 01பீ இலக்க தேயிலை மலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.
இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை கண்ட தொழிலாளர்கள்,பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட சிறுத்தையின் சடலம் நல்லதண்ணியில் உள்ள வனஜீவராசி திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக, ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.