பேதங்களைக் கடந்த மனிதாபிமானம்; கோமா நிலையிலுள்ள சசங்க அல்விஸுக்கு, கல்முனை சர்ஜுன் உதவி

🕔 June 5, 2016


– அஷ்ரப் ஏ சமத் –

ரோயல் கல்லுாாி மாணவன்   சசங்க அல்விஸ் கோமா நிலையில் உள்ளமையினை  ஊடகங்களின் ஊடாக அறிந்து கொண்ட,  வி கேர் (We care) பௌண்டேசன் அமைப்பின் தலைவர்  கல்முனை சர்ஜூன் அபூபக்கா், பாதிக்கப்பட்ட மாணவனின் கொள்ளுப்பிட்டி வீடு தேடி உதவினாா்.

ரோயல் கல்லுாாி மாணவன் சசங்க அல்விஸ், கடந்த  03 வருடங்களுக்கு முன்னர், ரோயல் கல்லுாாியின் நீச்சல் தடாகத்தில் மூச்சுத் திணறி பாதிக்கப்பட்டார். அதன் காரணமாக, அவர் கோமா நிலைக்குள்ளானர்.

இவரின் குடும்பாதார் சொந்த வீடொன்று இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் பிரதம மந்திரியினால் வீடொன்று வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை ரோயல் கல்லுாாியின் பழைய மாணவா்கள், பாடசாலை அதிபா் மற்றும் ஆசிரியா்கள் இவருக்கு உதவ முன்வரவில்லை.

மேற்படி மாணவனின் குடும்பம் குடியிருந்த வீடு, வீதி விஸ்தரிப்புக்காக, வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் உடைக்கப்பட்டது. இந்தச் செய்தி  சிங்கள ஊடகங்களில் வெளிவந்தன. இதனை அறிந்த  பிரதமா் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சா் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும், குறித்த மாணவனின் குடும்பத்தாருக்கு மருதானையில்  வீடொன்றை வழங்கியதாக மாணவரின் தாயார் தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த மாணவனின் நிலையினை அறிந்து கொண்ட கல்முனை வி கேர் (We care) பௌண்டேசன் தலைவா் சர்ஜுன், மாணவனின் வீடு தேடிச் சென்று உதவினார்.

இங்கு கருத்து தெரிவித்த சா்ஜூன்; “மிக பிரபல்யமான ரோயல் கல்லுாாி மாணவா்கள், அதிபா், ஆசிரியா்கள், பழைய மாணவா்கள் மற்றும் நலன் விரும்பிகள் இம்மாணவனுக்கு உதவாமல் இருக்கின்றார்கள் என்பது மிகவும் வருத்தத்தை தருகின்றது.

இந்த மாணவனின் நிலைபற்றி கேள்ளிப்பட்டவுடன், மாணவனின் தாயுடைய தொலைபேசி இலக்கத்தை ஊடகவியலாளா் அஸ்ரப் ஏ சமதிடம் பெற்று கல்முனையில் இருந்து உதவ முன்வந்தேன். இதைப்போன்று ஏனையோரும் மணிதபினமான ம் கொண்டு  இன, மத பேதங்களுக்கு அப்பால் உதவுங்கள்” என வேண்டிக் கொண்டாா்.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்