நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம், அரைக் கோடிக்கும் அதிகம்

🕔 June 4, 2016

Parliament - 0011லங்கை நாடாளுமன்றத்தின் மாதாந்த மின்சார கட்டணமாக, 50 தொடக்கம் 60 லட்சம் வரையில் செலுத்தப்படுவதாக தெரியவருகிறது.

நாடாளுமன்றத்தின் இவ்வாறான பாரியளவு மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்காக, சூரிய சக்தி மூலம் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளும் ஏற்பாட்டினை இந்த வருடத்திற்குள் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆயினும்,  நாடாளுமன்ற கட்டமைப்புக்கு எவ்வித பாதிப்பும் வராத வகையில், இதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சபாநாயகர் தலைமையில் கூடிய கூட்டம் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்றத்தின் மின் தேவைக்காக, சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளும் முறைமையைப் படுத்துவதற்கு 300 மில்லியன் தேவைப்படுவதாகவும், எனினும் ஏனைய நாடுகளில்இருந்து பெறப்பட்ட கடன்கள் மூலம் இது மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதி முதல், நாடாளுமன்றத்துக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்