ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசியெறிந்த முகம்மது அலி; வாழ்வின் சுவாரசிய சம்பவங்கள்

🕔 June 4, 2016

Mohamed Ali - 0128ளம் கண்ட 61 போட்டிகளில் 56 வெற்றிகள், அதில் 37 நாக்-அவுட் வெற்றிகள், ஒலிம்பிக் தங்கப்பதக்கம் என குத்துச்சண்டை உலகில் கொடிகட்டிப்பறந்த குத்துச்சண்டை நாயகன் முகம்மது அலி இன்று மறைந்தார்.

தன்னிகரற்ற வெற்றியாளனாக குத்துச்சண்டை உலகில் கோலோச்சிய முகம்மது அலி, தனது ஆக்ரோஷமான குத்துக்களால் எதிராளியை நிலைகுலைய வைக்கும் அசாத்திய திறமைக்கு சொந்தக்காரராக விளங்கியவர். அவரது தொழிற்குணத்திற்கு நேர் எதிராக அமைதியை நாடியவர், சமாதானத்தை விரும்பிய அற்புத மனிதர்.

வியட்நாம் போரை எதிர்த்ததற்காக அவருக்கு தடை விதிக்கப்பட்டபோதும் தன் நிலையை மாற்றிக்கொள்ளாமல் உடலைப்போன்றே உள்ளத்திலும் உறுதிமிக்கவராக வாழ்ந்தவர். மருத்துவர்களே கைவிட்டபோதும் தனது மனோபலத்தால் தன் ஆயுட்காலத்தை அதிகரித்துக்கொண்ட முகம்மது அலி இன்று நம்மிடையே இல்லை.

அவரது வாழ்வில் நடந்த சில சுவாரஷ்ய சம்பவங்கள் இங்கே…Mohamed Ali - 0123

முதல் குத்து சைக்கிள் திருடனுக்கு

1942 ம் ஆண்டு ஜனவரி 17ம் நாள் அமெரிக்காவின் கென்டகி நகரில் பிறந்தார் காசியஸ் மார்செலஸ் கிளே. ஆம்… முகம்மது அலியின் இயற்பெயர் இதுதான். முகமது அலி குத்துச்சண்டையை தேடிப் போகவில்லை. அது அவரது ரத்தத்திலேயே ஊறியிருந்தது. 12 வது வயதில், அவரது மோட்டார் சைக்கிளை திருட ஒருவன் முயற்சிக்க, அவனைப் பிடித்து சரமாரியாகக் குத்தினார்.

நொடி நேரத்தில் பல குத்துகள் விட்டதைப் பார்த்த ஜோ மார்டின் என்ற போலீஸ்காரர், தாக்குதலுக்கு காரணத்தை கேட்க, “அந்தத் திருடனை துவம்சம் செய்ய வேண்டும்” என்றான் சிறுவன் முகம்மது அலி.
அவனது திறமையைப் பார்த்து வியந்த மார்டின்தான், அலியை  குத்துச்சண்டையின் பக்கம் திசை திருப்பியவர். அவரே பயிற்சியாளராகவும் ஆனார் சிறுவன் முகமது அலிக்கு.

பள்ளிக்கு செல்ல மற்ற குழந்தைகள் பேருந்தில் ஏறிச்செல்ல பேருந்துடன் ஓடியே பள்ளிக்கு செல்வாராம் முகம்மது அலி.

ஆட்டோகிராப் போட மறுக்காதவர்

1940களில் குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் சுகர் ரே ராபின்சன். இவர்தான் முகம்மது அலியின் ஆதர்சன நாயகனும் கூட. ஒருமுறை அவரிடம் ஆட்டோகிராப் வாங்கச் சென்றார் அலி.

ஆனால் சுகர் ரே, ‘இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை…போ ‘ என்று எரிச்சல்பட நொந்துவிட்டார் அலி. தன்னைப் போல இனி எந்த சிறுவனும் மனம் நோகக்கூடாது என்று அன்று முடிவெடுத்தார் அலி.  எத்தனை பிஸியாக இருந்தாலும், யார் எந்த சூழ்நிலையில் ஆட்டோகிராப் கேட்டாலும் மறுக்காமல் போடுவதை வழக்கமாக்கிக் கொண்டார் அன்றுமுதல்.

ஒலிம்பிக் பதக்கத்தை ஆற்றில் வீசினார்

Mohamed Ali - 01241960 ம் ஆண்டு ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ‘லைட் ஹெவி வெயிட்’ பிரிவில் முகம்மது அலி தங்கப் பதக்கம் வென்றார்.  அப்போது அமெரிக்காவில் கறுப்பர் இனத்தவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன. ஹோட்டல்களில் சாப்பிடக் கூட கறுப்பின மக்களுக்கு அனுமதி கிடையாது அப்போது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டி முடிந்து நாடு திரும்பிய அலி, ஒரு ஹோட்டலுக்கு காபி சாப்பிட  சென்றார். “ நாங்கள் கறுப்பின மக்களுக்கு எதுவும் தருவதில்லை” என அங்கு பணியில் இருந்த பெண் சொன்னார். கடும் கோபமடைந்தார் முகம்மது அலி. விறுவிறுவென அங்கிருந்து வெளியேறிய முகம்மது அலி, தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஓகியோ நதியில் வீசியெறிந்தார். இந்த சம்பவத்தை பின்னாளில் தனது சுயசரிதையில் குறிப்பிட்ட அவர், “பிறப்பால் பிரிவினை ஏற்படுத்தும் இந்நாட்டிற்காக நான் வாங்கி வந்த  பதக்கத்தை அணிய விரும்பவில்லை” என்று குறிப்பிட்டார்.

போரை எதிர்த்த அஹிம்சைவாதி

1967ஆம் ஆண்டு நடந்த வியட்நாம் போரில் அமெரிக்க படையினருக்கு எதிரான நிலை எடுத்தார். பலமுறை எச்சரிக்கப்பட்டும், “போர் என்பது தனது மத கோட்பாடுகளுக்கு எதிரானது” என்றார் அலி. இதனால் அவர் பெற்ற ‘ஹெவி வெயிட் சாம்பியன்’ பட்டம் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. இதற்காக குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களும் அவருக்குத் தடை விதித்தன.

அதுமட்டுமின்றி வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளிலும் பங்கேற்க முடியாத வகையில் அவரது பாஸ்போர்ட் பறிக்கப்பட்டது. ஆனாலும் மனம் தளரவில்லை முகம்மது அலி. தான் எடுத்த முடிவில் உறுதியாக நின்றார்.

சுமார் மூன்றரை ஆண்டு காலம் குத்துச்சண்டடை பக்கமே தலை வைத்து படுக்காமல் வைராக்கியமாக இருந்துக் காட்டினார் அலி. பின்னர் களம் கண்ட பிறகும் முன்பிருந்த வேகமும் சுறுசுறுப்பும் சற்றும் குறையாமல் போட்டிகளில் பங்கேற்றார்.

சொல்லி அடிக்கும் கில்லி

Mohamed Ali - 0127போட்டிக்கு முன்னரே, எதிராளிகளை தனது சொற்களால் தாக்கத் தொடங்குவது முகமது அலியின் சிறப்பு. ஒருமுறை சோனி லிஸ்டனுடன் போட்டியிட்டபோது, போட்டிக்கு முன்பாகவே ‘லிஸ்டன் ஒரு கரடி. அவரை வென்ற பிறகு ஒரு மிருகக் காட்சி சாலையை அவருக்குப் பரிசளிப்பேன்’ என்று கூறினார் அலி. சொன்னதைப் போலவே லிஸ்டனை அந்த போட்டியில் திணறடித்து வெற்றிபெற்றார் அலி.

இந்த போட்டியில் லிஸ்டனுக்கு மருத்துவ உதவி செய்த அவரது மருத்துவர்கள், சூட்சுமமாக அவரது கிளவுசில் மருந்தைத் தடவிவிட, அது அலியின் கண்ணில் பட்டு அலியின் பார்வை மங்கியது. லிஸ்டன் இதற்கு முன்பும் பலமுறை இப்படி பல வீரர்களை வீழ்த்தியுள்ளார். எரியும் கண்களில் கண்ணீரோடு விளையாடிய அலி, கோபத்தை தனது பன்ச்களில் காட்டி லிஸ்டனை நிலைகுலையவைத்து நாக்-அவுட் முறையில் வென்றார்.

தனது வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே அலி, நாக்-அவுட் முறையில் தோற்றிருக்கிறார்.Mohamed Ali - 0125

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்