கிழக்கு முதலமைச்சருக்கு ஜனாதிபதி மட்டுமே தடைவிதிக்க முடியும்: பிரதமர் தெரிவிப்பு

🕔 June 3, 2016

Ranil - 0998கிழக்கு மாகாண முதலமைச்சரை ராணுவ முகாம்களுக்குள் நுழைய முயாமல் தடைசெய்வதற்கு ஜனாதிபதியால் மட்டுமே முடியும் என்று பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நாட்டில் இல்லாதபொழுது, கடற்படை அதிகாரி ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் திட்டிய விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு, ராணுவத்தினர் இனப்பாகுபாட்டினைத் தூண்டினார்களா என்பது குறித்து விசாரிக்குமாறு, பல அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே, பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார் என, ஆங்கில இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது.

சம்பூர் மகாவித்தியாலயத்தில் கடந்த மாதம் 20 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றில், கடற்படை அதிகாரி ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பகிரங்கமாக திட்டியிருந்தார்.

இதனையடுத்து, முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில், முப்படையினர் கலந்து கொள்ளவதில்லை என்றும், முப்படைகளின் முகாம்களுக்குள் கிழக்கு முதலமைச்சரை நுழைய விடுவதில்லை என்றும் முப்படையினர் இணைந்து தீர்மானமொன்றினை மேற்கொள்ளனர்.

ஆயினும், இந்த தடையினை முப்படையினர் பின்னர் நீக்கியிருந்தனர். இதனையடுத்து நேற்றைய தினம், திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்