பதவி ராஜினாமா செய்தி, உண்மைக்கு புறம்பானது; அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விளக்கம்

அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு வெளிநாடு சென்றுள்ளார் என, இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
எனது அமைச்சுப் பதவியினை ராஜினாமா செய்து விட்டு, நான் வெளிநாடு சென்றுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததன. இதில் எவ்வித உண்மைகளும் இல்லை.
அதேவேளை, மட்டக்களப்பு பல்கலைக்கழக விரிவாக்கம் தொடர்பில் கலந்துரையாடல்கள் மற்றும் ஒப்பந்தங்களை செய்து கொள்வதற்காக, மலேசியாவுக்கான விஜயமொன்றை நான் மேற்கொண்டுள்ளேன்.
ராஜாங்க அமைச்சர்களின் பதவிகள் மற்றும் அதிகாரங்கள் உடனடியாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பிரகடனம் செய்யப்பட வேண்டுமென, சகல ராஜாங்க அமைச்சர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
இந்தக் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர், ராஜாங்க அமைச்சர்களின் அதிகாரங்கள் தொடர்பில் ஒருவார காலத்துக்குள் வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கியுள்ளனர்.
இது தவிர, வேறு எந்தவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.