விலங்குகள் பலியிடுவதைத் தடைசெய்யும் சட்டம்; இந்து சமய அமைச்சு கொண்டுவருகிறது

🕔 May 31, 2016

Banned -09விலங்குளை இந்துக் ஆலயங்களில் பலியிடுவதற்கு தடைவிதிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றினை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, சிறைச்சாாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்து கலாசாரத் திணைக்களம் இதற்கான சட்ட வரைபினை உருவாக்கியுள்ளதோடு, சட்ட வரைஞர் திணைக்களத்தின் ஒப்புதலையும் பெற்றுள்ளது.

ஏற்கனவே, இந்து ஆலங்களில் சமயச் சடங்குகளின் பொருட்டு விலங்குகள் பலிகொடுக்கப்பட்ட சந்தர்பங்களில், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்