யோசிதவின் காதலி CSNல் வேலை செய்கிறார் என்பதை தவிர, அங்கு வேறு தொடர்புகள் எமக்கில்லை; நாமல்

🕔 May 31, 2016

Namal - 0865யோசித ராஜபக்ஷவின் காதலி, சி.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிவதால்தான், அங்கு அவர் அடிக்கடி சென்று வந்தாரே தவிர, அந்த நிறுவனத்துக்கும் ராஜபக்ஷ குடும்பத்துக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதே, அவர் மேற்கண்ட விடயத்தைக் கூறினார்.

கால்டன் ஸ்போட்ஸ் நெற்வேக் எனப்படும் சி.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தில் ராஜபக்ஷவினருக்கு எவ்வித உரிமையும் இருக்கவில்லை என்றும் அவர் இதன்போது சொன்னார்.

யோசித ராஜபக்ஷவின் காதலி – இன்னும் அந்த நிறுவனத்தில் வேலை செய்கிறார். இது மட்டும்தான் யோசிதவுக்கும் அந்த நிறுவனத்துக்கும் இடையிலான தொடர்பாகும். அதனால்தான் யோசித அங்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது, அங்குள்ளவர்கள் உதவிகள் கோரியபோது – செய்து கொடுத்தார்.

தமது காதலி ஏதாவது உதவி கேட்கும் போது, ஒவ்வொருவரும் நிச்சயம் அதைச் செய்வார்கள் என்று கூறிய நாமல் ராஜபக்ஷ, பொதுமக்களுக்கு ராஜபக்ஷகள் நிறைய உதவிகள் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

கால்டன் என்கிற பெயருக்கு ராஜபக்ஷவினர் காப்புரிமை பெறவில்லை என்பதால், அந்தப் பெயரை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும் எனவும் இதன்போது நாமல் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்