மின்னல் தாக்கத்தில் பாதிப்படைந்த இருவர், வைத்தியசாலையில் அனுமதி

🕔 May 31, 2016

– க. கிஷாந்தன் –

Lighting - 01ஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஸ்டர்ஸ்பி மீரியாகோட்டை தோட்டப்பகுதியில் இடி மின்னல் தாக்கம் காரணமாக இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரதேசத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால், குறித்த தோட்ட பகுதியில் பணிபுரிந்துகொண்டிருந்த இரு ஆண்கள் அதிர்ச்சியடைந்த  நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

மலையகத்தில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்றமையினால், மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்