தொப்புள் கொடியும் தலைப்பாகையும்; அன்புடீனின் கவிதை நூல் வெளியீடு

🕔 May 29, 2016

Anbudeen - 016– றிசாத் ஏ. காதர் –

விஞர் கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் எழுதிய ‘தொப்புள் கொடியும் தலைப்பாகையும்’ கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை பாலமுனை இப்னு ஸீனா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கவிஞர் சோலைக்கிளி கவிதை நூலின் முதற் பிரதியினைப் பெற்றுக் கொண்டார்.

நிகழ்வில் எழுத்தாளர் உமா வரதராஜன், கலாபூசணம் கவிஞர் பாலமுனை பாறூக், மன்சூர் ஏ காதிர், மருதூர் ஏ மஜீட், சிரேஷ்ட அறிவிப்பாளர் எஸ். ரபீக், மற்றும் ஸிராஜ் மஸ்ஹூர் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கவிஞர் அன்புடீன் ஏற்கனவே முகங்கள், சாமரையில் மொழி கலந்து ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். நெருப்பு வாசல் எனும் பெயரிலான சிறுகதைத் தொகுதியொன்றினையும் சில வருடங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தார்.

கலந்தர் லெப்பை எனும் இயற்பெயரைக் கொண்ட கவிஞர் அன்புடீன், பாலமுனையைப் பிறப்பிடமாவும், அட்டாளைச்சேனையை வாழ்விடமாகவும் கொண்டவராவார்.

சுமார் 50 வருடங்களாக எழுதி வரும் இவர் – இலங்கை தபால் திணைக்களத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.Anbudeen - 014Anbudeen - 013Anbudeen - 012Anbudeen - 015

Comments

புதிது பேஸ்புக் பக்கம்