கிழக்கு முதலமைச்சர் விவகாரம் தொடர்பில், ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்
ராணுவ உயர் அதிகாரிகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்றினை மேற்கொண்டு கலந்துரையாடினார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் – அண்மையில், கடற்படை அதிகாரியொருவரை நிகழ்வொன்றில் வைத்து பகிரங்கமாக திட்டிய விவகாரம் தொடர்பிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும், பிரதமர் இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.