மஹியங்கணை இன முறுகலை தவிர்ப்பதற்கு அமைச்சர் ஹக்கீம் முக்கிய பங்காற்றினார்; பிரதேசவாசி சாட்சியம்

🕔 May 27, 2016

Hakeem - 012கியங்கணை பிரதேசத்தில் – பங்கரகம்மன கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், வெசாக் தினத்தன்று பௌத்த கொடிகளை தீயிட்டுக் கொழுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தினைத் தொடர்ந்து ஏற்படவிருந்த இன முறுகலைத் தவிர்ப்பதற்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் முக்கிய பங்காற்றினார் என்று பங்கரமமையினைச் சேர்ந்த ஷேகுதீன் மௌலவி தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை அமைச்சர் ரஊப் ஹக்கீமின் கவனத்திற்கு – தான் கொண்டு வந்ததையடுத்து, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுடன் அமைச்சர் ஹக்கீம் தொடர்புகொண்டு அப்பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கூறியதாவும் மௌலவி ஷேகுதீன் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக பங்கரகம்மன, ரோஹன மற்றும் தம்பகொல்ல கிராமங்களில் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்குமாறு அடுத்தடுத்து இரண்டு நாட்களாக பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் ஹக்கீம் கூறியிருந்தார் எனவும் மௌலவி ஷேகுதீன் கூறுகின்றார்.

அத்துடன் பதுளை பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருடனும் அமைச்சர் ஹக்கீம் தொடர்பில் இருந்தார் என்றும், அமைச்சரின் ஆலோசனைக்கமைவாக பொலிஸ் உயர் அதிகாரிகள் மேற்கொண்ட உரிய நடவடிக்கைகள், நிலைமை சுமுகமாவதற்கு பெரிதும் உதவியுள்ளதாகவும் மௌலவி ஷேகுதீன் தெரிவித்துள்ளார்.

Comments