தமிழ் தேசிய கூட்டமைப்பைப் போல், கிழக்கு முதலமைச்சர் செயற்படுவதாக மஹிந்த குற்றச்சாட்டு

🕔 May 26, 2016

Mahinda - 094மிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் போன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்து கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சம்பூரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கடற்படை அதிகாரி ஒருவரை, கிழக்கு மாகாண முதலமைச்சர் அவமதித்தமை தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு முதலமைச்சர், கடற்படை அதிகாரியைத் தூற்றிய சம்பவமானவது படைவீரர்களை அண்மைக் காலமாக இழிவுபடுத்தி வரும் மற்றுமொரு நடவடிக்கையாகவே கருதப்பட வேண்டும். எவ்வாறான ஓர் அரசியல்வாதி என்றாலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ராணுவ முகாம் ஒன்றுக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பலவந்தமாக பிரவேசிக்க எடுத்த நடவடிக்கைக்கு நிகராகவே, கிழக்கு முதலமைச்சர் செயற்பட்டுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறுவதனை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்