ஹாபிஸ் நஸீர் நல்ல நண்பர், அவரின் நடத்தையை நியாப்படுத்த முடியாது: பாதுகாப்பு செயலாளர்

🕔 May 26, 2016

Karunasena hettiarachchi - 099கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது நல்ல நண்பர் என்றபோதிலும், கடற்படை அதிகாரியுடன் அவர் நடந்து கொண்ட விதத்தை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்றிரவு கலந்து கொண்டபோதே பாதுகாப்புச் செயலாளர் இதனைக் கூறினார்.

முதலமைச்சர் ஹாபிஸ் நஸீருடன் – தான் தொலைபேசியில் உரையாடியதாகவும், அன்போது, அவர் நிதானமாகச் செயற்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்ததாகவும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இதுதொடர்பில் பகிரங்கமாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ முதலமைச்சர் மன்னிப்புக் கோருவதில் எந்தவிதமான தவறுகளும் இல்லை என்றும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்