கிழக்கு கல்வியமைச்சர் தலையிலான குழுவினர் அக்கரைப்பற்று விஜயம்

🕔 May 26, 2016

Thandayuthapaani - 01– றிசாத் ஏ காதர் –

கிழக்கு மாகாண கல்வியமைச்சர் தலைமையிலான குழுவினர் இன்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு விஜயம் செய்கின்றனர்.

கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ். தண்டாயுதபாணி, மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம். நிசாம், கல்வியமைச்சின் செயலாளர் அசங்க அபேவர்த்தன, மாகாண கல்வித் திணைக்கள பிரதம கணக்காளர்பீ.கேதீஸ்வரன், கல்வியமைச்சின்உதவிச் செயலாளர்கள், மேலதிக மாகாணப் பணிப்பாளர்கள், பாடங்களுக்குப் பொறுப்பான பிரதி, உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் அமைச்சின்அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த விஜயத்தின்போது வருகை தருகின்றனர்.

கல்வியமைச்சர் தலைமையிலான இந்த விஜயத்தின்போது, வலயத்தின் கல்வி நடவடிக்கைகள்தொடர்பாக ஆராயப்படும் என்று அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். காசிம் தெரிவித்தார்

கிழக்கு மாகாண கல்வி அமைச்சரின் விசேட செயற்றிட்டத்திற்கமைவாக மாகாணத்திலுள்ள கல்வி வலயங்களுக்குநேரடி விஜயம் மேற்கொண்டு, கல்விச்செயற்பாடுகளை மதிப்பிடுகின்ற நடவடிக்கையின்  ஒரு கட்டமாகவே அக்கரைப்பற்று வலயத்துக்கான இவ் விஜயம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்