பாடசாலைகள் நாளை திறக்கப்படும்; சீருடையற்ற மாணவர்கள், சாதாரண உடைகளோடு செல்ல முடியும்

🕔 May 22, 2016

Ministry - Education - 099நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

ஆயினும், சப்ரகமுவ மாகாணத்திலுள்ள 52 பாடசாலைகள் இதற்குள் உள்ளடங்க மாட்டாது.

இயற்கை அனர்த்தம் காரணமாக சப்ரகமுவ மாகாணத்திலுள்ள பாடசாலைகள் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் மூடப்பட்டன.

எவ்வாறாயினும், சப்ரகமுகவ மாகாண வயலக் கல்விப் பணிப்பாளர்களின் முடிவுக்கமைய அங்குள்ள பாடசாலைகளை மீளவும் திறக்க முடியும் என்று கல்வியமைச்சின் செயலாளர் டப்ளியு.எம். பந்துசேன தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவ மாகாணத்திலுள்ள பல பாடசாலைகளில் இன்னும் வெள்ளம் மற்றம் மண் சரிவு அச்சுறுத்தல்  நிலவுவதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, இயற்கை அனர்த்தம் காரணமாக பாடசாலை சீருடைகளை இழந்த மாணவர்கள், சாதாரண உடையுடன் பாடசாலைகளுக்குச் செல்ல முடியும் என்றும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்