புதிது செய்தித் தளம், ஓராண்டைப் பூர்த்தி செய்கிறது

🕔 May 22, 2016

Birth day - 099‘புதிது’ செய்தித் தளம் இன்று (22 ஆம் திகதி) தனது முதலாவது வருடத்தை நிறைவு செய்கிறது.

ஒரு செய்தித் தளத்தை தொடர்ச்சியாக நடத்திச் செல்வதென்பது பாரிய சவால்களுக்குரிய விடயமாகும். ஆயினும், இறைவனின் துணையுடன் நாம் வெற்றியடைந்திருக்கிறோம்.

‘புதிது’ செய்தித் தளம், தனது சாத்தியங்களுக்கு உட்பட்ட வகையில், தகவல்களை வழங்குவதில் உறுதியுடன் செயற்பட்டிருக்கிறது.

சமூக அவலங்கள் தொடர்பிலும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியமான நடத்தைகள் குறித்தும் செய்திகளை வெளியிடும் போது, அதனால் பாதிக்கப்படும் தரப்புக்கள் வீசுகின்ற கற்களையும், போடுகின்ற தடைகளையும் தாண்டியே – இந்த ஓராண்டினை ‘புதிது’ செய்தித் தளம் பூர்த்தி செய்திருக்கிறது.

சமூகமும், பொதுமக்களும் பாதிக்கப்படும் போது – அவர்கள் சார்பில் உரத்துக் குரல் கொடுக்க வேண்டியது, ஓர் ஊடகத்தின் பணியாகும். அந்தப் பணியினைப் பலிகொடுத்து விட்டு, வேறு தேவைகளுக்காக இயங்கும் ஓர் ஊடகமாக புதிது ஒருபோதும் இருக்காது.

இரண்டாவது ஆண்டில் – இன்னும் ஏதாவது நல்லதாய் செய்ய வேண்டும் என்கிற அக்கறை உள்ளது.

இறைவன் அதற்கு துணைபுரிய வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறோம்.

இந்த இடத்தில், எமக்கு செய்திகளை வழங்கிவரும் பிராந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் விளம்பரங்களை தந்து உதவி வருகின்ற சகோதரர்களுக்கு விசேடமாக நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.

புதிதாய் எமது ஊடகப் பயணம் தொடரும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்