இந்தியாவில் வரலாறு காணாத வெப்பம்; ராஜஸ்தானில் 51 செல்ஸியஸ்

🕔 May 21, 2016

Rajastan - 0971ந்தியாவின் ராஜஸ்தானில் 51 செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

இந்தியாவில் வானிலை பதிவு ஆவணப்படுத்தப்படத் தொடங்கிய காலத்தில் இருந்து பதிவாகியிருக்கும் மிக அதிக பட்ச வெப்பநிலை இது தான் என, அந்த நாட்டு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் தற்போது வெப்ப அலை நிலவி வருகிறது.

இதற்கு மத்தியில், பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் உள்ள இந்த பஹலோடி என்னும் நகரில் 51 செல்சியஸ் எனும் இந்த அதிக பட்ச வெப்ப நிலை பதிவாகியுள்ளது.

இதற்கு முந்தைய அதிக பட்ச வெப்ப நிலையானது 1956ல் பதிவாகிய 50.6 செல்சியஸ் ஆகும்.

வட இந்தியாவின் பெரும்பகுதிகளில் கடந்த பல வாரங்களாக வெப்ப நிலை 40 செல்சியஸைத் தாண்டி, அங்கு வெப்ப அனல் வீசீ வருகிறது.

இந்தியாவில் பருவமழையை எதிர்நோக்கும் வாரங்களில் நல்ல சூரிய வெளிச்சமும், வெப்பம் அதிகரிக்கும் நிலையும் இருப்பது இயல்பாகும்.

ஆனால் உயிருக்கு ஆபத்தான அளவில் வெப்பநிலை 50 செல்சியசை தாண்டுவது வழக்கத்துக்கு மாறானதாகும்.

பருவமழைதான் வெப்பநிலையில் இருந்து தப்புவதற்கான வழியாகும். அது ஜூன் மாத மத்தியில் தான் வருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்