540 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

🕔 May 21, 2016

Prisoners - 0098வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 540 சிறைக் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளில் இருந்து இன்று சனிக்கிழமை இந்தக் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்.

சிறிய குற்றங்களைப் புரிந்து சிறைத் தண்டனைகளைஅனுபவித்து வருகின்றவர்களே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் தினைக்களத்தின் பேச்சாளர் ரி.என். உப்புள்தெனிய  தெரிவித்தார்.

Comments