ஹக்கீம் – ஹசனலி லடாய்க்கு தீர்வு; கூட்டு அறிக்கை விடவும் தயார்

🕔 May 20, 2016

Hakeem+Hasanali - 009
மு
ஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும் செய­லாளர் எம்.ரி. ஹசனலிக்கும் இடையில் நில­வி வந்த அனைத்து உள்­ளக முரண்­பா­டு­க­ளுக்கும் தீர்வு காணப்­பட்­டுள்­ளதாக தெரியவருகிறது.

முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வர் ஹக்­கீ­முக்கும் செய­லாளர் ஹசனலிக்­கு­மி­டையில் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை இரவு நடை­பெற்ற சந்­திப்பின் போதே அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வுகள் எட்டப்பட்டுள்னன.

இரு­வ­ருக்­கு­மி­டையில் பிரச்­சி­னை­களை பேச்­சு­வார்த்தை மூலம் சுமு­க­மாக தீர்த்து வைப்­ப­தற்­கென நிய­மிக்­கப்­பட்­டுள்ள தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் வேந்தர் ஏ.எம்.இஸ்­ஸாக்கின் கொழும்பில் இல்­லத்தில் மேற்படி சந்திப்பு இடம்­பெற்­றது.

தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தின் வேந்தர் ஏ.எம்.இஸ்ஸாக் இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில்; “எல்லாப் பிரச்­சி­னை­க­ளுக்கும் சுமு­க­மான தீர்வு காணப்­பட்டுள்ளதாகவும், அனைத்துப் பிரச்­சி­னை­களும் தீர்க்­கப்­பட்­டு­விட்­டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தலைவர் ஹக்­கீமும் செய­லாளர் நாயகம் ஹசனலியும் வெகு­வி­ரைவில் கூட்டு அறிக்­கை­யொன்­றினை வெளி­யி­ட­வுள்­ளார்கள். அவ்­வ­றிக்­கையில் அனைத்து விட­யங்­களும்  தெளி­வுப்­ப­டுத்­தப்­படும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதே­வேளை முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் ஹசனலி மற்றும் கட்­சியின் அரசியல் உயர் பீட உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்து இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டுள்ள மௌல­விகள் இரு­வ­ரது விவ­காரம் தொடர்­பாக பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு நியமிக்­கப்­பட்­டுள்ள மூவர் கொண்ட குழுவினர், செய­லாளர் ஹசன்­அ­லிக்கும் தலைவர்  ஹக்­கீ­முக்­கு­மி­டை­யி­லான சந்­திப்பில் மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­னங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்