தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? இன்று மாலை முடிவு

🕔 May 19, 2016

Tamil nadu election - 2016 - 01ந்தியாவின் தமி­ழ­கத்தினுடைய அடுத்த முதல்வர் யார் என்­பதை தீர்­மா­னிக்கும் தமிழக சட்­ட­மன்ற தேர்­தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை காலை தொடங்குகின்றன.

அந்தவகையில், தமிழகத்திலுள்ள 232 தொகுதிகளுக்­கான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தமி­ழ­கத்தில் அர­வக்­கு­றிச்சி, தஞ்சை தவிந்த 232 சட்­டப்­பே­ரவை தொகு­தி­க­ளுக்­கான வாக்­குப்­ப­திவு கடந்த 16ஆம் திகதி நடை­பெற்­றது. வாக்­குப்­ப­திவு முடிந்­ததும் மின்னணு இயந்­தி­ரங்கள் சீலி­டப்­பட்டு, வாக்கு எண்ணும் இடங்களுக்கு பாது­காப்­பாக அனுப்பி வைக்கப்­பட்டன.

இந்நிலையில் தமி­ழகம் முழு­வதும் அமைக்­கப்­பட்­டுள்ள 68 வாக்கு எண்ணும் இடங்களில், இன்று காலை 08 மணிக்கு வாக்கு எண்­ணும் நடவடிக்கைகள் தொடங்கி, பிற்ப­க­லுக்குள் முடி­வுகள் வெளி­யாகும் என கூறப்­ப­டு­கி­றது.

வாக்கு எண்ணும் பணியில் 9621 அதி­கா­ரிகள் செயற்­ப­டவுள்ளனர்.

 

Comments