3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பூமியை மோதிய விண்கல்: ஆதாரம் கண்டுபிடிப்பு

🕔 May 18, 2016

Meteorite - 0987பூமியை சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ராட்சத விண்கல் ஒன்று தாக்கியதற்கான ஆதாரத்தை அவுஸ்ரேலியாவிலுள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அப்படி மோதிய விண்கல் 20 தொடக்கம் 30 கிலோமீட்டர் அகலம் கொண்டது என்றும், அது பூமியின் மீது மோதியதில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நீள அகலம் கொண்ட பெரும்பள்ளத்தை ஏற்படுத்தியிருக்கும் எனவும் அந்த ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர்.

வட மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள பாறைகளில், அந்தப் பெரும் மோதலில் வெடித்துச்சிதறி ஆவியாகிப்போன சில தாதுப்பொருட்கள் சிறிய கண்ணாடிபோன்ற மணிகளில் காணப்படுவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அவ்வளவு பெரிய விண்கல் பூமியின் மீது மோதியது நிலநடுக்கங்களையும், எரிமலை வெடிப்புகளையும் உலகம் முழுவதிலும் ஏற்படுத்தியிருக்கும் எனவும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

Comments