பொலிஸாருக்கு எதிராக, 08 மாதங்களில் ஆயிரம் முறைப்பாடுகள்
பொலிஸாருக்கு எதிராக கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான 08 மாத காலப் பகுதியில் மாத்திரம் 1000 முறைப்பாடுகள் வரை கிடைக்கப்பெற்றுள்ளதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இவற்றில் சுமார் 200 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ கூரே தெரிவித்துள்ளார்.
‘தமதுமுறைப்பாடுகள் குறித்து பொலிஸார் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை’ எனத் தெரிவித்தே, அதிக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூரே கூறினார்.
அடுத்ததாக, பொலிஸார் தமது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்துள்ளமை குறித்தும், மற்றையது அவர்கள் பாராபட்சமாக நடந்து கொள்வதாகவும் முறைப்படு செய்யபபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“பொலிஸாருக்கு எதிராக கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளை விசாரிப்பது பொலிஸ் ஆணைக்குழுவின் முக்கிய பணி அல்ல” எனவும் ஆரியதாஸ குரே குறிப்பிட்டுள்ளார்.