மண்மேடு சரிந்ததில், வீடு சேதம்
🕔 May 17, 2016



– க. கிஷாந்தன் –
ஹட்டன் – ரொத்தஸ் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று மாலை 06 மணியளவில் மண்மேடு சரிந்து விழுந்ததில், குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
ஆயினும், எந்தவிதமான உயிராபத்துகளும் ஏற்படவில்லை.
மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பெறுமதிமிக்க பொருட்கள் சேதமாகியுள்ளதாகவும், குடியிருப்பாளர்கள் ஐந்து பேர் தற்காலிகமாக அயலவரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட வீட்டில் வசித்த ஐவரில், 05 மாத குழந்தை ஒன்று உள்ளமையும் குறிப்பிடதக்கது.


Comments



