Back to homepage

Tag "மைத்திரிபால சிறிசேன"

சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட மைத்திரிக்கு தடை

சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட மைத்திரிக்கு தடை 0

🕔4.Apr 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. 1994 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி

மேலும்...
நீதிமன்றில் தான் ஆஜராக வேண்டிய அவசியமில்லை: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி நீதிமன்றுக்கு அறிவிப்பு

நீதிமன்றில் தான் ஆஜராக வேண்டிய அவசியமில்லை: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி நீதிமன்றுக்கு அறிவிப்பு 0

🕔3.Apr 2024

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு – தான் ஏற்கனவே வழங்கிய சாட்சியங்கள் தொடர்பில், நீதிமன்றில் விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். இன்று புதன்கிழமை (03) தனது சட்ட ஆலோசகர் ஊடாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்ட பிரேரணையின் ஊடாக அவர் இதனைக்

மேலும்...
நீதிமன்றில் ஆஜராகுமாறு மைத்திரிக்கு உத்தரவு

நீதிமன்றில் ஆஜராகுமாறு மைத்திரிக்கு உத்தரவு 0

🕔28.Mar 2024

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் – குற்றப்புலனாய்வு திணைக்களம் (சிஐடி) இது தொடர்பான விடயங்களை நீதிமன்றில் அறிக்கையிட்டதை அடுத்து, இன்று (28)

மேலும்...
ஈஸ்டர் தினத் தாக்குதலின் சூத்திரதாரி இந்தியா: சிஐடி யிடம் மைத்திரி பரப்பு வாக்குமூலம்

ஈஸ்டர் தினத் தாக்குதலின் சூத்திரதாரி இந்தியா: சிஐடி யிடம் மைத்திரி பரப்பு வாக்குமூலம் 0

🕔27.Mar 2024

இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இந்தியாவும் அதன் உளவுத் துறையும் இருந்ததாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (சிஐடி) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார் என்று – உயர் மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தமக்குத் தெரிவித்ததாக ‘தமிழன்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஈஸ்டர் தின தாக்குதலின் சூத்திரதாரி யார் என தனக்குத்

மேலும்...
ஐந்தரை மணி நேர வாக்குமூலம்: சிஐடி-இல் இருந்து வெளியேறினார் மைத்திரி

ஐந்தரை மணி நேர வாக்குமூலம்: சிஐடி-இல் இருந்து வெளியேறினார் மைத்திரி 0

🕔25.Mar 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (சிஐடி) சுமார் ஐந்தரை மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். ஈஸ்டர் தின தாக்குதலின் சூத்திரதாரி யார் என தனக்குத் தெரியும் என்று அண்மையில் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை தொடர்பாக, வாக்குமூலம் வழங்க வருமாறு அவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைத்திருந்தது. அதற்கிணங்க

மேலும்...
மைத்திரி சிஐடியில் முன்னிலை

மைத்திரி சிஐடியில் முன்னிலை 0

🕔25.Mar 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (25) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முன்னிலையாகியுள்ளார். ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி யார் என்பது தனக்கு தெரியும் என – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். நீதிமன்றம் உத்தரவிடுமாயின் குறித்த தகவல்களை தான் ரகசியமாக நீதிபதிகளிடம் வழங்க தயாரெனவும் அவர்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி பற்றிய ‘கதை’; 03 வாரங்களுக்கு முன் கிடைத்த தகவலை வைத்தே கூறினேன்: மைத்திரி

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி பற்றிய ‘கதை’; 03 வாரங்களுக்கு முன் கிடைத்த தகவலை வைத்தே கூறினேன்: மைத்திரி 0

🕔24.Mar 2024

மூன்று வாரங்களுக்கு முன்னர் பெற்றுக் கொண்ட தகவலின் அடிப்படையிலேயே – ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி யார் என தனக்குத் தெரியும் என்று – தான் கூறியதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மூன்று வாரங்களுக்கு முன்னர் எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நான் அந்த விடயத்தை வெளியிட்டேன்.

மேலும்...
சிஐடிக்கு வருமாறு மைத்திரிக்கு அழைப்பு

சிஐடிக்கு வருமாறு மைத்திரிக்கு அழைப்பு 0

🕔24.Mar 2024

உயிர்த்த தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து குறித்து வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக – அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) அழைத்துள்ளது. இதன்படி, மைத்திரிபாலவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் நாளையதினம் அவரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் – வாக்குமூலம் பெற்றுக் கொள்ளவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருக்கிறார்.

மேலும்...
மைத்திரியை விசாரிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு

மைத்திரியை விசாரிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு 0

🕔24.Mar 2024

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரியாகச் செயல்பட்டவர் குறித்து தனக்குத் தெரியும்

மேலும்...
மைத்திரியை கைது செய்யுமாறு, மனோ, காவிந்த எம்.பிகள் வலியுறுதல்

மைத்திரியை கைது செய்யுமாறு, மனோ, காவிந்த எம்.பிகள் வலியுறுதல் 0

🕔23.Mar 2024

ஈஸ்டர் தின தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யார் என்பது தனக்குத் தெரியும் என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்துமாறு – எதிர்க்கட்சி எம்.பி.க்களான மனோ கணேசன் மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோர் இன்று (23) கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை உடனடியாக பொலிஸார் விசாரிக்க வேண்டும்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதலை நடத்தியது யார் என்பது எனக்குத் தெரியும்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

ஈஸ்டர் தின தாக்குதலை நடத்தியது யார் என்பது எனக்குத் தெரியும்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி 0

🕔22.Mar 2024

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் எனவும், அது தொடர்பில் நீதித்துறைக்கு தகவல்களை வெளியிட தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (22) ஊடகங்களிடம் பேசிய முன்னாள் ஜனாதிபதி, இது தொடர்பில் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தாலோ அல்லது உத்தரவு பிறப்பித்தாலோ அது தொடர்பான தகவல்கள்

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு சார்பாக, அவரே எடுத்த அமைச்சரவைத் தீர்மானம்: ரத்துச் செய்தது உச்ச நீதிமன்றம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு சார்பாக, அவரே எடுத்த அமைச்சரவைத் தீர்மானம்: ரத்துச் செய்தது உச்ச நீதிமன்றம் 0

🕔29.Feb 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பதவியில் இருந்து வெளியேறிய பின்னரும் கொழும்பு 07 பேஜெட் வீதியிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்குவதற்கு அனுமதி வழங்கிய அமைச்சரவை தீர்மானத்தை உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (29) ரத்து செய்துள்ளது. அதன்படி 2019 ஒக்டோபர் 15 ஆம் திகதி இது தொடர்பில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை செல்லுபடியற்ற வகையில்

மேலும்...
காணாமல் போன தங்கக் குதிரை, தனக்குக் கிடைத்த ரத்தினம் பதித்த வாள்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட தகவல்கள்

காணாமல் போன தங்கக் குதிரை, தனக்குக் கிடைத்த ரத்தினம் பதித்த வாள்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட தகவல்கள் 0

🕔25.Jan 2024

தனது மகள் வீட்டில் அண்மையில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு குதிரை காணாமல் போனதாக வெளியான செய்தி பொய் என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது மூத்த மகளின் வீட்டில் தங்கக் குதிரை இருந்ததாகக் கூறப்படும் கதை பொய் என்றும், அந்த வீட்டில் உணவும், பானமும் மாத்திரமே திருடப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...
மைத்திரியின் மகள் வீட்டில் திருட்டு: 30 லட்சம் ரூபாய் இழப்பு என முறைப்பாடு

மைத்திரியின் மகள் வீட்டில் திருட்டு: 30 லட்சம் ரூபாய் இழப்பு என முறைப்பாடு 0

🕔23.Jan 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளுக்குச் சொந்தமான பத்தரமுல்ல விக்கிரமசிங்கபுரத்திலுள்ள வீட்டில் சுமார் 03 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். 150,000 ரூபாய் பணம், தங்க முலாம் பூசப்பட்ட ஒட்டகச் சிலை, ஸ்மார்ட் கடிகாரம் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட 08 சிங்கப்பூர் நாணயங்கள் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன.

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் சொத்துக்கள் தொடர்பில் சத்தியக் கடதாசி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் சொத்துக்கள் தொடர்பில் சத்தியக் கடதாசி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔2.Nov 2023

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் – தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை சத்தியக்கடதாசிகள் ஊடாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்