Back to homepage

Tag "மூதூர்"

சஹ்ரானின் ஒத்துழைப்புடன் வகுப்புகளை ஏற்பாடு செய்தார் எனும் குற்றச்சாட்டில் நபரொருவர் மூதூரில் கைது

சஹ்ரானின் ஒத்துழைப்புடன் வகுப்புகளை ஏற்பாடு செய்தார் எனும் குற்றச்சாட்டில் நபரொருவர் மூதூரில் கைது 0

🕔14.May 2021

சஹ்ரான் ஹாசிமுடைய ஒத்துழைப்புடன் 2018 ஆம் ஆண்டு அடிப்படைவாதத்தைத் தூண்டும் விதமாக வகுப்புகளை ஏற்பாடு செய்தார் எனும் குற்றச்சாட்டில், நபர் ஒருவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். மூதூர் பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 38 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி

மேலும்...
சஹ்ரானின் கொள்கைகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் நால்வர் கைது: இருவர் மூதூரைச் சேர்ந்தவர்கள்

சஹ்ரானின் கொள்கைகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் நால்வர் கைது: இருவர் மூதூரைச் சேர்ந்தவர்கள் 0

🕔1.Apr 2021

சஹ்ரான் காசிமுடைய கொள்கைகளைப் பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவர்களில் ஒருவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என்றும், மற்றையவர் திஹாரியைச் சேர்ந்த 32 வயதுடையவர் எனவும் அஜித் ரோஹன கூறியுள்ளார். மேற்படி இருவரும் சஹ்ரானுடைய

மேலும்...
மூதூரில் முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்க அரசாங்கம் முயற்சி: பிரதேச செயலாளரும் ஓரங்கட்டப்படுகிறார்: இம்ரான் மகரூப் குற்றச்சாட்டு

மூதூரில் முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்க அரசாங்கம் முயற்சி: பிரதேச செயலாளரும் ஓரங்கட்டப்படுகிறார்: இம்ரான் மகரூப் குற்றச்சாட்டு 0

🕔20.Jun 2020

– ஹஸ்பர் ஏ ஹலீம் – மூதூர் பிரதேசத்தில் முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்கும் முன்னேற்பாடுகளின் அடிப்படையில்தான், அங்குள்ள பிரதேச செயலாளர் ஓரங்கட்டப்படும் செயற்பாடு நடைபெறுகிறது என திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான  இம்ரான் மகரூப் தெரிவித்தார். மூதூர்ப்பிரதேச ஆதரவாளர்களுடனான சந்திப்பொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்ற போது

மேலும்...
மூதூர் வைத்தியசாலைக்கு, ஆளுநர் அனுராதா யஹம்பத் விஜயம்

மூதூர் வைத்தியசாலைக்கு, ஆளுநர் அனுராதா யஹம்பத் விஜயம் 0

🕔4.Jan 2020

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் நேற்று முன்தினம் மூதூர் வைத்தியசாலைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டார். இதன்போது மருத்துவமனையின் குறைபாடுகள் குறித்து மருத்துவமனைஅதிகாரிகளுடன் உரையாடியதுடன், மத்திய அரசுடன் கலந்தாலோசித்து மூதூர் வைத்தியசாலையின் குறைபாடுகளை சீர்செய்வதாகவும் உறுதியளித்தார்.   பின்னர் மருத்துவமனையின் நோயாளர்கள் தங்கி சிகிச்சைபெறும் விடுதிகளுக்கு சென்று நோயாளர்களின் நலன்

மேலும்...
மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தகத்துக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா விஜயம்: தரமுயர்த்துவது குறித்தும் கலந்துரையாடல்

மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தகத்துக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா விஜயம்: தரமுயர்த்துவது குறித்தும் கலந்துரையாடல் 0

🕔14.Mar 2019

– எம்.எஸ்.எம். ஸாகிர் – மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தகத்தை தரமுயர்த்துவது தொடர்பாக நடைபெற்றுவரும் நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக, கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் சகிதம் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு காணப்படும் தேவைகள் குறித்து கண்டறிந்து கொண்டார்.இதன் போது கிழக்கு மாகாண சுதேச வைத்திய ஆணையாளர் டொக்டர்

மேலும்...
மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தகம்; கிராமிய வைத்தியசாலையாகிறது: ஆணையாளர் தகவல்

மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தகம்; கிராமிய வைத்தியசாலையாகிறது: ஆணையாளர் தகவல் 0

🕔13.Aug 2018

– எம்.எஸ்.எம். ஸாகிர் – மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தகத்தை கிராமிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆணையாளர் டொக்டர் திருமதி ஸ்ரீதர் தெரிவித்தார். மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தக பொறுப்பதிகாரி டொக்டர் எச்.எம். ஹாரீஸ் தலைமையில் இடம்பெற்ற ஆயுள்வேத மத்திய மருந்தகத்தின் 21ஆவது வருட நிறைவு விழாவில்

மேலும்...
உங்கள் ஒருவரையும் மிச்சம் வைக்க மாட்டேன்: கூச்சலிட்டவர்களை நோக்கி, மு.கா. தலைவர் அச்சுறுத்தல்

உங்கள் ஒருவரையும் மிச்சம் வைக்க மாட்டேன்: கூச்சலிட்டவர்களை நோக்கி, மு.கா. தலைவர் அச்சுறுத்தல் 0

🕔6.Feb 2018

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், நேற்று திங்கட்கிழமை இரவு மூதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது, அவரைப் பேச விடாமல், அங்கு திரண்டிருந்த மக்கள் கூச்சல் எழுப்பினர். இதன்போது ஆத்திரமடைந்த முஸ்லிம் காங்கிரசின் தலைவர், கூச்சலிட்டவர்களை அச்சுறுத்தும் வகையில் உரையாற்றினார். “எங்களோடு வம்புக்கு வந்தால்,

மேலும்...
மூதூர், தோப்பூர் பிரதேசங்களில், சுகாதார நிலையம், மத்திய மருந்தகம் ஆகியவை திறந்து வைப்பு

மூதூர், தோப்பூர் பிரதேசங்களில், சுகாதார நிலையம், மத்திய மருந்தகம் ஆகியவை திறந்து வைப்பு 0

🕔15.Aug 2017

– சப்னி அஹமட் –மூதூர் – தக்வா நகரில் அமைக்கப்பட்ட கிராமிய சுகாதார நிலையம் மற்றும் தோப்பூர் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தகம் ஆகியவற்றினை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் திறந்து வைத்தார். மேற்படி கிராமிய சுகாதார நிலையம் மற்றும் ஆயுர்வேத மத்திய மருந்தகத்தகம் ஆகியவற்றினைத் திறந்து வைக்கும் நிகழ்வுகள் இன்று செவ்வாய்கிழமை

மேலும்...
பாலியல் துஷ்பிரயோக வழக்கு: சந்தேக நபர்களை அடையாளம் காட்ட, சிறுமிகள் தவறினர்

பாலியல் துஷ்பிரயோக வழக்கு: சந்தேக நபர்களை அடையாளம் காட்ட, சிறுமிகள் தவறினர் 0

🕔5.Jun 2017

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டதாகக் கூறப்படும் சிறுமிகள், இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது, சந்தேக நபர்களை இனங்காட்டத் தவறியுள்ளனர். குறித்த அடையாள அணிவகுப்பு, மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிகள் மூவரும், சந்தேகநபர்களை அடையாளம் காட்ட தவறியமையினை அடுத்து, சந்தேகநபர்களை எதிர்வரும் 12ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு

மேலும்...
மூதூர் மாணவியர் துஷ்பிரயோக வழக்கு; திங்கட்கிழமை அடையாள அணிவகுப்பு

மூதூர் மாணவியர் துஷ்பிரயோக வழக்கு; திங்கட்கிழமை அடையாள அணிவகுப்பு 0

🕔31.May 2017

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் மாணவிகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக் கூறப்படும் சம்பத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்களும் இன்று புதன்கிழமை மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஏற்கனவே நான்கு சந்தேக நபர்கள் கைது செய்ய்பட்ட நிலையில், நேற்றைய தினம் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். மூன்று மாணவியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்தாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு, மூதூர்

மேலும்...
இவர்கள் எங்களை துஸ்பிரயோகம் செய்யவில்லை; பாதிக்கப்பட்ட மாணவிகள் வாக்கு மூலம் வழங்கியதாக இம்ரான் எம்.பி. தெரிவிப்பு

இவர்கள் எங்களை துஸ்பிரயோகம் செய்யவில்லை; பாதிக்கப்பட்ட மாணவிகள் வாக்கு மூலம் வழங்கியதாக இம்ரான் எம்.பி. தெரிவிப்பு 0

🕔30.May 2017

தமிழர் மற்றும் முஸ்லிம்களிடையில் கலவரம் ஒன்றை ஏற்படுத்த கடந்த சில தினங்களாக சில தீய சக்திகள் திட்டமிட்டு  முயற்சித்து வருகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். மூதூர் மல்லிகை தீவில் மூன்று தமிழ் மாணவிகளை முஸ்லிம் இளைஞர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறி, அப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண நிலையின் உண்மை தன்மையினை அறிய

மேலும்...
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக மன்சூர் இடம்மாற்றம்; பின்னணியில் அரசியல்வாதி இருப்பதாக புகார்

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக மன்சூர் இடம்மாற்றம்; பின்னணியில் அரசியல்வாதி இருப்பதாக புகார் 0

🕔19.May 2017

– எம்.ஐ.எம். றியாஸ் – மூதூர் வலயக் கல்வி பணிப்பாளராக செயற்பட்டு வந்த எம்.கே.எம். மன்சூர், அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு இடமாற்றப் பட்டுள்ளார். இதனையடுத்து, நேற்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில், அவர் – பணிப்பாளராக தனது பதவியினைப் பொறுப்பேற்றுக் கொண்டார். மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளராக மன்சூர் கடமையாற்றியபோது, அவர் தமக்குத் தேவையில்லை என்றும், அவரை

மேலும்...
மூதூர் மீனவர், நான்கு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்

மூதூர் மீனவர், நான்கு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார் 0

🕔12.Feb 2017

– எப்.முபாரக்-  மூதூர் கடலுக்கு கடந்த வியாழக்கிழமையன்று தொழிலுக்காகச் சென்றிருந்த நிலையில் காணாமல் போன மீனவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். மூதூர் 01 – பஹ்ரியா நகரைச் சேர்ந்த லத்தீப் பஸ்ரி என்ற 29 வயதுடைய மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரைத் தேடும் பணியில் கிராம மக்களும்

மேலும்...
திருகோணமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில், மூதூர் இளைஞர்கள் படுகாயம்

திருகோணமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில், மூதூர் இளைஞர்கள் படுகாயம் 0

🕔17.Oct 2016

– எப். முபாரக் – திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கைப் பாலத்தருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றையவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம்

மேலும்...
கிழக்கை வடக்குடன் இணைக்கும் திருட்டுத்தனம் நடைபெறுகிறது: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

கிழக்கை வடக்குடன் இணைக்கும் திருட்டுத்தனம் நடைபெறுகிறது: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை 0

🕔10.Sep 2016

– றிசாத் ஏ காதர் – வெளிநாட்டுச் சூழ்ச்சிகளுடன், திருட்டுத்தனமாக கிழக்கு மாகாணத்தினை வட மாகாணத்துடன் இணைக்கின்ற ஒரு பாரிய முயற்சி நடைபெற்று வருகிறது என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், தற்போதைய எதிர் கட்சித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். முஸ்லிம் மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், கிழக்கு மாகாண சபைக்குள் இருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்