Back to homepage

Tag "நீதிமன்றம்"

யுனிசெப் வாகனத்தை கெஹலிய பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு: சிஐடி விசாரணை

யுனிசெப் வாகனத்தை கெஹலிய பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு: சிஐடி விசாரணை 0

🕔19.Mar 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனம் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) அண்மையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் – தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தமை தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கெஹலியவை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட

மேலும்...
கெஹலிய ரம்புக்வெல்ல; அவர் கூறும் நோய்களால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளாரா: மருத்துவர் குழு பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு

கெஹலிய ரம்புக்வெல்ல; அவர் கூறும் நோய்களால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளாரா: மருத்துவர் குழு பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு 0

🕔18.Feb 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவர் கூறும் நோய்களால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிய – ஆலோசகர்கள் அடங்கிய 07 பேர் கொண்ட மருத்துவ குழுவினால் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மருத்துவ குழுவின் அறிக்கையை பெப்ரவரி 29 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் சுகாதார சேவைகள்

மேலும்...
‘லைக்கா மொபைல்’ நிறுவனத்துக்கு இலங்கைப் பெறுமதியில் 345 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

‘லைக்கா மொபைல்’ நிறுவனத்துக்கு இலங்கைப் பெறுமதியில் 345 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔29.Oct 2023

பணமோசடி மற்றும் வற் வரி (VAT) மோசடிக்காக ‘லைக்கா மொபைல்’ (Lycamobile) குழுமத்தின், பிரான்ஸ் நிறுவனங்களுக்கு – பரிஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை 10 மில்லியன் யூரோக்கள் (இலங்கைப் பெறுமதியில் 345.40 கோடி ரூபாய்) அபராதம் விதித்துள்ளது. லைக்கா குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டோபர் டூலியும் வற் மோசடிக்கு உடந்தையாக இருந்தமைக்காக – அவருக்கு

மேலும்...
மான் இறைச்சிக் கறி சமைத்தவருக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம்

மான் இறைச்சிக் கறி சமைத்தவருக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம் 0

🕔10.Oct 2023

மான் இறைச்சிக் கறி சமைத்துக் கொண்டிருந்த 17 வயதுடைய சிறுமி ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விலானகம பகுதியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அலவத்துகொட பொலிஸார் – குறித்த சிறுமியைக் கைது செய்தனர். இதனையடுத்து கண்டி மேலதி நீதவான் முன்னிலையில் இவர் ஆஜர் செய்யப்பட்ட போது, அவருக்கு 20 ஆயிரம் ரூபா

மேலும்...
ஞானசார தேரர் உள்ளிட்ட மூவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

ஞானசார தேரர் உள்ளிட்ட மூவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை 0

🕔3.Oct 2023

கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க நேற்று (02) அறிவித்தல் பிறப்பித்துள்ளார். பம்பலப்பிட்டியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் உரிமை தொடர்பான சர்ச்சை குறித்து – உண்மைகளை தெரிவிப்பதற்காக அவர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறைப்பாடு ஒன்றை பரிசீலித்த நீதவான்

மேலும்...
முன்னாள் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவை வெளியேற்றுமாறு நீதிமன்று உத்தரவு

முன்னாள் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவை வெளியேற்றுமாறு நீதிமன்று உத்தரவு 0

🕔29.Aug 2023

முன்னாள் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன – சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து அவரை வெளியேற்றுமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க நேற்று (28) உத்தரவு பிறப்பித்துள்ளார். பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அமைச்சர் பதவியை ராஜினாமா

மேலும்...
“சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிப்பவர்களில் அதிகமானோர், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்டவர்கள்”

“சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிப்பவர்களில் அதிகமானோர், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்டவர்கள்” 0

🕔10.Aug 2023

திறைசேரிக்குச் சுமை ஏற்படாத வகையில் சிறைச்சாலைகளைப் பராமரிக்கும் சட்ட ரீதியிலான கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற, சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்தார். சமூகத்தில் பேசுப்படும் வகையில் பணம் செலுத்தி – தனியான சிறைச்சாலை அறைகளை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலான நடவடிக்கையாக அது அமையாது என்றும் அவர் கூறினார்.

மேலும்...
இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்கவின் பிணை நிபந்தனைகளில் தளர்வு

இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்கவின் பிணை நிபந்தனைகளில் தளர்வு 0

🕔9.Aug 2023

அவுஸ்ரேலிய பெண் ஒருவரை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, அவுஸ்ரேலியாவினுள் பயணிப்பதற்கு அந்த நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. . இதன்படி, தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவினுள் பயணிக்கவும், அவுஸ்திரேலியாவிற்குள் விமானத்தில் பயணிக்கவும் தனுஷ்கவுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதன்படி, அவர் ஒரு மாதத்தில் 2 தடவை அவுஸ்திரேலியாவுக்குள் விமானத்தில் பயணிக்க அனுமதி

மேலும்...
நீதிமன்றக் கூரை மீதேறி நபர் ஒருவர் ஆர்ப்பாட்டம்

நீதிமன்றக் கூரை மீதேறி நபர் ஒருவர் ஆர்ப்பாட்டம் 0

🕔18.Jul 2023

மெல்சிறிபுர பொலிஸாரால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி, ஒருவர் இன்று (18) காலை குருநாகல் நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் கூரையில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பில் மெல்சிறிபுர பொலிஸார் – தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறி 55 வயதுடைய நபர் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க, புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க, புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை 0

🕔14.Jul 2023

நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் தேங்கிக் கிடப்பதைக் குறைக்கவும், நீதி முறைமையின் மூலம் நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும், இலங்கையில் ‘மனு பேரம்பேசும் சட்டத்தை’ (Plea Bargaining law) அறிமுகப்படுத்த – நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று (13) தெரிவித்தார். இலங்கையில் உள்ள நீதிமன்றங்களில் 11,27000 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும்,

மேலும்...
கல்முனை நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பாரிசவாதம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

கல்முனை நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பாரிசவாதம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 0

🕔7.Jun 2023

– பாறுக் ஷிஹான் – பாரிசவாதம் தொடர்பான விழிப்பூட்டல் கலந்துரையாடல் கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற கட்டிடத்தில்  இன்று (07) நடைபெற்றது. கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம்.ஐ. றைசுல் ஹாதி  தலைமையில் நடைபெறகுறித்த இந்த நிகழ்வில், கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி, கல்முனை மாவட்ட நீதிபதி ஏ.எம். முஹம்மட்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் வெளிநாடு செல்லத் தடை

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் வெளிநாடு செல்லத் தடை 0

🕔6.Jun 2023

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ட்விட்டர் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார். பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கும் வரை, அவருக்கு எதிராக பயணத்தடை விதிக்குமாறு மருதங்கேணி பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை பரிசீலித்த கிளிநொச்சி நீதிவான், பயணத்தடை விதித்து

மேலும்...
போலி நாணயத்தாள் கொண்டு, நீதிமன்ற அபாரதத் தொகையைச் செலுத்திய நபர் கைது

போலி நாணயத்தாள் கொண்டு, நீதிமன்ற அபாரதத் தொகையைச் செலுத்திய நபர் கைது 0

🕔13.May 2023

நீதிமன்று விதித்த அபாராதத் தொகையைச் செலுத்தும் போது, போலி நாணத்தாளை வழங்கிய 39 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டார். மஹியங்கனை மாவட்ட நீதிமன்றில் நபரொருவருக்கு 21 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபர் அபராதத் தொகையை செலுத்தினார். அதன்போது அவர் வழங்கிய பணத்தில் 05 ஆயிரம் ரூபா – போலி நாணயத்தாள் என

மேலும்...
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு தள்ளுபடி

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு தள்ளுபடி 0

🕔20.Apr 2023

அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்திவைக்கக் கோரி, இந்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று (20) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுவை கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி விசாரித்தபோது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து கொண்ட நீதிமன்றம், அதன்

மேலும்...
பரிசோதனைகளுக்கு அதிக பணம் வசூலித்த வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுகூடங்களுக்கு 55 லட்சம் ரூபா அபராதம்

பரிசோதனைகளுக்கு அதிக பணம் வசூலித்த வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுகூடங்களுக்கு 55 லட்சம் ரூபா அபராதம் 0

🕔24.Mar 2023

இரத்தப் பரிசோதனை, டெங்கு மற்றும் அன்ரிஜன் சோதனைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக பணம் வசூலித்த குற்றத்துக்காக கொழும்பிலுள்ள 08 வைத்தியசாலைகள் மற்றும் பரிசோதனைகூடங்களுக்கு 5.5 மில்லியன்ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் கங்கொடவில நீதவான் நீதிமன்றங்களால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது. நுகர்வோர் அதிகார சபையினால் கொழும்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்